கோலத்தின் சிறப்பு
தன் வீட்டு வாசலுக்கு வரும் பூச்சிகள் எறும்புகள் கூட பசியுடன்
திரும்பக்கூடாது என்பதற்காக அரிசிமாவில் கோலம் போடுவது நம் தமிழர்களின்
பண்பாடு........
கோலம் போடுவது என்பது மனதையும் உடலையும ஒருமைபடுத்தும் பயிற்சியாகும். சிந்தித்து பாருங்கள்.
எதை எழுதினாலும், மனமும் உடலும் இணைந்து செயல் பட்டால் தான் சாத்தியமாகும்.
அதனை மேலும் ஆர்வத்துடன் செய்யவும், கற்பனைத் திறனை வளர்க்கவும், குனிந்து நிமிர்ந்து போடும் பொழுது நல்ல உடற்பயிற்சியாகவும், வாசலில் வெட்ட வெளியில் நின்று இச்செயலை செய்யும் பொழுது நல்ல பிராண வாயு கிடைக்கவும், குறிப்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியிலேயே வராத காலத்தில், நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அருமையான பொக்கிஷங்களில் ஒன்று.
கோலத்தினை நீங்கள் தரையிலோ, மொட்டை மாடிகளிலோ, காகிதத்திலோ, எதில் வேண்டுமானாலும் போட்டுப் பழகலாம். நிச்சயமாக உங்களது, சிந்திக்கும் திறனும், கற்பனா சக்தியும் மேலும் மேலும் வளர்வதை அனுபவித்து உணர்வீர்கள்.
"நமது கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர்."
மார்கழியில் என்ன விசேஷம்?
"குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். "
ஆனால் பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட
பார்க்காததுபோல் செல்கிறார்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தில் ஊறிப்போன இன்றைய
தமிழர்கள் பலர்........
கோலம் என்பது அலங்காரத்திற்காகப்
போடப்படுவதில்லை. இது ஒருவிதமான வடிவம். படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான
வடிவம்தான். அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம். இதை யந்திரம் என்றும்
சொல்வோம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். யந்திரம்
ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும். ஆங்கிலத்தில் மெஷின் என்று
சொல்லப்படும் இயந்திரமும் பலவிதமான உருவங்கள் முறைப்படி ஒன்றிணைந்ததுதான்.
இந்தப் பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள்
ஒன்றிணைந்து ஒரு மகத்தான, பிரம்மாண்டமான யந்திரமாக இருக்கிறது. இந்தப்
பிரபஞ்சத்தை பார்த்துவிட்டுதான் நாம் பல சிறிய அளவிலான யந்திரங்களை
உருவாக்கி உள்ளோம். இந்தச் சூரியன், சந்திரன், இந்தப் பூமி இவற்றைப்
பார்த்துத்தான் நாம் கடிகாரங்களையே உருவாக்கினோம்.
நமது
கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான
யந்திரமாகத்தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப்
பார்க்கின்றனர்.
நமது கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட
வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார
உருவமாகப் பார்க்கின்றனர். பல நேரங்களில் தகர உருளையில் கோலப்பொடியை போட்டு
உருட்டுகின்றனர் அதிலிருந்து ஏதோ ஒரு வடிவம் வருகிறது. ஆனால் கோலம்
போடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது.
கோலம் புத்தியை கூர்மை படுத்தும்
எதை எழுதினாலும், மனமும் உடலும் இணைந்து செயல் பட்டால் தான் சாத்தியமாகும்.
அதனை மேலும் ஆர்வத்துடன் செய்யவும், கற்பனைத் திறனை வளர்க்கவும், குனிந்து நிமிர்ந்து போடும் பொழுது நல்ல உடற்பயிற்சியாகவும், வாசலில் வெட்ட வெளியில் நின்று இச்செயலை செய்யும் பொழுது நல்ல பிராண வாயு கிடைக்கவும், குறிப்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியிலேயே வராத காலத்தில், நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அருமையான பொக்கிஷங்களில் ஒன்று.
கோலத்தினை நீங்கள் தரையிலோ, மொட்டை மாடிகளிலோ, காகிதத்திலோ, எதில் வேண்டுமானாலும் போட்டுப் பழகலாம். நிச்சயமாக உங்களது, சிந்திக்கும் திறனும், கற்பனா சக்தியும் மேலும் மேலும் வளர்வதை அனுபவித்து உணர்வீர்கள்.
"நமது கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர்."
மார்கழியில் என்ன விசேஷம்?
"குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். "
இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு
நகர்கிறான். அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து
வடக்கிற்கும் ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு
நோக்கியும் நகர்கிறான். சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது,
பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும்
சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும், தேவையான அறிவு, ஞானம்
இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒன்று தான் கோலம் இடுவதும்.
குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம்
வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக
செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். உங்களுக்கும், உங்கள்
வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக்
கொண்டு வர முடியும். இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக
உள்ளது.
No comments:
Post a Comment