பண்டைத்
தமிழர் திருமணம்
பண்டைத் தமிழரிடையே இருவகைத் திருமண முறை தொடக்கத்தில் வழக்கமாக இருந்ததாகவும், ஒன்று களவுமுறை என்றும், மற்றது கற்பு முறை என்றும், இதற்கு மாறாகத் தொல்காப்பியர் காலத்தில் வடநாட்டார் பின்பற்றி வந்த எட்டுவகைத்
திருமண முறைகளைத் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர் என்றும் வரலாற்றுப் பேராசிரியர் வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுகிறார்.
களவுத்திருமணம்
களவுத் திருமணம் பலர் அறிய நடப்பதல்ல. ஆணும், பெண்ணும் மனம் ஒத்துக் கலப்பதை அது குறிப்பிடுகிறது. தமிழர்களின் வாழ்வில் மிகப் பழங்காலத்தில் இத்தகைய திருமண முறையே பெருவாரியாக இருந்திருக்க வேண்டும். சமூக வளர்ச்சியில், காலப்போக்கில் பலர் அறியச் சில சடங்குகளைச் செய்து திருமணம் என்பதை நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழுந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
கற்புமுறைத்திருமணம்
பலர் அறிய நடந்த திருமணத்தைக் கற்புமுறைத் திருமணம் என்றனர். தொல்காப்பியர் இதனைப் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று குறிப்பிடுகிறார். திருமணம் என்பது ஏன் ஏற்பட்டது என்பதற்கானக் காரணத்தைப் பெருமபாலான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் காணத் தவறிவிட்டனர்.
தமிழக வரலாற்றில் அந்தக் காரணத்தைக் கண்டு சொன்ன பெருமைக்குரியவர் பேராசிரியர்
பி.டி. சீனிவாச அய்யங்கார் ஆவார்.
பண்டைத் தமிழரின் பெரும்பாலான திருமணங்கள் இன்றைக்குப்
போலவே பெற்றோர்கள் ஏற்பாடு செய்து நடந்தவையே. இவை
பெரும்பாலும் மாமன் மகள், அத்தை மகன், அக்கா மகள் ஆகியோரைத் திருமணம் செய்வது அல்லது நெருங்கிய
உறவினரிடையே நடந்தன என்கிறார், அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல்.
ஹார்ட் இவரது கருத்து, மரபு வழியான தமிழறிஞர்களின் கருத்துக்கு மாறானதாக அமைந்துள்ள
போதிலும் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது எனலாம்.
அதற்குமாறாக எந்த உறவும் இல்லாமல் அன்பினால் மட்டும் இருவர்
இணைந்தனர் என்பதே. ஆனால் வழக்கமாகத் தமிழறிஞர்கள்
இதற்கு நேர்மாறாகவே பொருள் கொண்டு பழந்தமிழர்களின் திருமணங்கள் எல்லாம் காதல் திருமணங்களே.
திருமணத்திற்குப்
பெண் கேட்டல் :
திருமணத்தின் தொடக்கமாகப் பெண் கேட்டு மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்லும் பழக்கம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள்
காட்டுகின்றன. காதலித்தவர் அல்லாதவர் பெண் கேட்டு வந்ததை, குறுந்தொகை (171) : மீன்வலை மாப்பட்டா அங்கு இது மற்று எவனோ நொதுமலர் தலையே என்று
குறிப்பிடுகிறது. மீனுக்காகப் போட்ட வலையில் விலங்கு அகப்பட்டதைப் போலக் காதலர் பெண் கேட்டு வருவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாகப் புதியவர்
(நொதுமலர்) பெண் கேட்டு வந்தனர் என்று கூறுவதிலிருந்து பெண் கேட்டு மணமகன் வீட்டார் வரும் பழக்கம் குறிப்பிடப்படுகிறது.
மேலும் குறுந்தொகையில் (385) புதுவோர்த்து என்று புதிதாகப் பெண் கேட்டு வருபவர் குறிக்கப்படுகிறார். திருமணத்திற்குப்
பெண் கேட்டு வந்த பொழுது அதனைப் பெண்வீட்டார் ஏற்றுக் கொண்டனர் என்ற செய்தி குறுந்தொகையில் (374) மலைகெழ வெற்பன் தலைவந்து இரப்ப நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் குறுந்தொகை
(351) பாடலில் காதலித்துப் பெண் கேட்ட தலைவனுக்கே தலைவியைத் தர
சுற்றத்தார் உடன்பட்டனர் என்பதை துறைவற்கு உரிமை செய்யினர் நமரே என்று குறிப்பிடுவதன் மூலம் அறியலாம்.
பெண்
பரிசம் :
மணமகனுக்கு வரதட்சணை கொடுத்துத் திருமணம் நடக்கும் இந்தக் காலத்திற்கு மாறாக, பெண்களுக்குப் பரிசம் கொடுத்து அந்தக் காலத்தில் திருமணம் நடந்ததை இலக்கியங்கள்
காட்டுகின்றன. புறநானூற்றில் (343) முசுறி, நகர் போன்ற செல்வத்தைக் கொடுத்தாலும்
தந்தை தன் மகளைத் திருமணத்திற்குக் கொடுக்கமாட்டார் என்பதை
… முசுறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையரல்லலோர் வரையலளிவளெனத் தந்தையுங்கொடாஅ னயின் என்று கூறுவது அறியத் தக்கது. இன்று என்னதான் வரதட்சணை கொடுத்துத் திருமணம் நடந்தாலும்
பெண் கேட்டுப் போகும் பழக்கமும் பெண் பரிசம் கொடுக்கும் பழக்கமும் தொடர்ந்து வருவது அதன் பழமையை உணர்த்தும்.
திருமணக்
காட்சி :
பழந்தமிழகத்தில் திருமணம் நடந்த முறையை நாம் அறிவதற்கு அகநானூற்றுப் பாடல்கள்
இரண்டு நமக்கு உதவுகின்றன அகம் 86-ஆம் பாடல்
காட்டும் திருமணக் காட்சி மரத்தூண்கள் நிறுத்தி அழகிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புது மணல் பரப்பப்பட்டுள்ளது.
விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. மாலைகள் தொங்க
விடப்பட்டுள்ளன. விருந்துக்காக உழுத்தம்பருப்புடன் பொங்கல் சமைத்து வைக்கப்பட்டுள்ளது. இருள் நீங்கிய அதிகாலையில் திங்கள் ரோகிணி
நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நேரத்தில் தலையிலும், கையிலும் குடத்தை உடைய வயது முதிர்ந்த
பெண்கள் அவற்றை முறையாகத் தர ஆரவாரம் எழுகிறது. ஆண்பிள்ளை பெற்ற நான்கு பெண்கள் கூடி நின்று கற்பின் வழுவாது பல பேறுகளையும் பெற்றுக் கணவனை
விரும்பிப் பேணுவாயாக என்று பூக்களை நெல்லுடன் தலையில் தூவி மணமகளை வாழ்த்தினர். இச்சடங்குகள் முடிந்த பின்னர் சுற்றத்தார் சிறந்த
இல்லக்கிழத்தியாக விளங்குவாய் என்று பெண்ணை மணமகனிடம் தந்தனர்.
திருமணத்தில்
தாலி :
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா என்ற வாதப் பிரதிவாதங்கள் அறிஞர்களிடையே நடந்து வந்துள்ளது.
பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், திருமணத்தில் தாலி அணிவிப்பது மிக
முக்கியமான செயல். இது தமிழர்களின் தூய வழக்கமாகும்.
ஆரியர்களிடம் இல்லாத வழக்கமாகும். வடமொழியிலுள்ள கிருகய சூத்திரத்தில் தாலி பற்றிக் குறிப்பில்லை என்று
தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
மேலும் புலிப்பல் தாலி அணிவிக்கும் பழக்கத்திலிருந்து பொன் தாலி அணிவிக்கும் பழக்கம் வந்தது
என்கிறார். தாலி கட்டும் வ-ழக்கம் பற்றி பேராசிரியர்
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், மணப்பெண்ணின்
கழுத்தில் தாலி கட்டுவது ஆரியர் வருகைக்கு முற்பட்ட தமிழகத்தின் வழக்கமென்றும், அந்த வழக்கம் ஆரியர் வருகைக்குப் பின்னும் பின்பற்றப்பட்டது என்றும் இந்த இடத்திலே
சொல்லிவிட வேண்டும். (தென்னிந்திய வரலாறு பக்.214) என்று கூறுவது சீனிவாச அய்யங்கார்
கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது.
பழந்தமிழர் திருமணத்தில் தாலி அணிவித்ததற்கான நேரடியான சான்று ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், நெடுநல் வாடையில் (136&7) அரசனைப் பிரிந்த அரசியின் நிலையை வர்ணிக்கின்ற பொழுது ஆரந்தாங்கிய வலர்முலை ஆகத்துப் பின்னும்
நெடுவீழ் தாழுத்துணை துறந்து என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் முன்பு முத்தாற்செய்த கச்சுசுமந்த பருத்த
முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க என்று கூறுகிறார். தாலியைத் தவிர மற்ற அணிகளை அரசி துறந்திருந்தாள்
என்கிறார். மூலத்தில் தாலி என்ற வார்த்தைக் குறிப்பிடவில்லை.
சிலப்பதிகாரத்தில் மங்கல அணி என்பது திருமணத்தில் அணியப் பெறும் ஒரு முக்கிய அணியே என்பது அறிஞர் கருத்து. திருமணத்தில் தாலி அணிவிக்கப்பட்டதற்கான நேரடியான சான்று முதன் முதல் தமிழ் கந்தபுராணத்தில் உள்ளது என்கிறார் பேராசிரியர் கமில் சுலபில் (Literary Convention in Akam Poetry, Page – 64). அவரே மேலும், எந்தக் காலத்திலிருந்து திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது என்கிறார். (பக்.64)
பேராசிரியர் ஆர். செண்பகலெட்சுமி தனது ‘Ornaments from Epigraphy’ என்ற கட்டுரையில் தாலி திருமணத்தின்
சிறப்பு அடையாளம் என்பது முதல் ராஜராஜசோழன்
காலத்துத் திருவெண்காட்டுக் கல்வெட்டினால் தெரிய வருகிறது. இக்கல்வெட்டில் செம்பியன் மாதேவி கொடுத்த நகைகள் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
நம்பிராட்டி யார்க்குச் செய்த தாலியும் நாலி நூலுமாய் நிறை ஐங்கழஞ்சு என்று தாலி பற்றி கல்வெட்டுச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.
தாலி கட்டுவது என்பது தமிழர் திருமணத்தில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது.
இஸ்லாமியத் தமிழர்கள் கருமணித் தாலியும், கிறிஸ்துவத் தமிழர்கள் சிலுவைத் தாலியும்
அணிவிக்கும் பழக்கம் இன்று நடைமுறையில்
உள்ளது. இது திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் தமிழர்களின் பழமையான பழக்கம் என்பதையே காட்டுவதாக அமைகிறது.
திருமண
வயது :
சங்க இலக்கியத்தில் திருமண வயது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. சிலப்பதிகாரத்தில் திருமணத்தின்
போது கோவலனுக்கு வயது 16, கண்ணகிக்கு 12 வயதுமானது என்று குறிப்பிடப்படுகிறது. கந்தபுராணத்தில் முருகன் – வள்ளிக்குத் திருமணம் நடைபெறும் போது வள்ளியின் வயது 12 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களிடையே குழந்தை மணம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் தெரியவில்லை.
பெண் பருவம் அடைந்த பின்பே திருமணம் நடைபெற்றதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
திருமணத்தில்
பிற சடங்குகள் :
திருமணக் காலத்தில் பெண் தன் காலில் அணிந்துள்ள சிலம்பை அகற்றிவிடும் சடங்கு
நடைபெற்றுள்ளது.
சிலம்பு கழிச் சடங்கு, திருமணத்தில் ஒரு முக்கிய சடங்காக அன்று இருந்திருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின்பு புதிய சிலம்பு அணிந்துகொள்ளும் வழக்கம்
இருந்திருக்க வேண்டும்.
அந்தச் சிலம்பு புனிதமானதாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். திருமணத்தில் மணமகனின்
பெற்றோர்கள் மணமகளின் கையைப் பிடித்து மணமகனிடம் கொடுக்கும் பழக்கம் இருந்ததைக் குறிஞ்சிப் பாட்டு (231-2) நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மணம் என்று கூறுவதால்
அறியலாம். புதிய சடங்கு முறைகள் புகுந்தாலும் தமிழரின் பழமையான திருமணச் சடங்கு முறைகள் இன்றளவும்
தொடர்ந்து வந்து கொண்டிருப்பது வரலாற்றுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது எனலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteVampires in the Enchanted Castle casino - FilmFileEurope
ReplyDeleteVampires in the Enchanted Castle Casino. 럭스 토토 Vampires in the Enchanted Castle Casino. Vampires air jordan 18 retro red great site in air jordan 18 retro toro mens sneakers from me the Enchanted Castle Casino. Vampires in the Enchanted find air jordan 18 retro Castle Casino. Vampires in the air jordan 18 retro yellow for sale Enchanted