இலை மடித்தல்-அறிவியல் பூர்வமான உண்மை.
இலை
மடித்தல்
இந்த இலை மடித்தல் முறை வந்தேரிகளான ஆரியர்களால் கொண்டு
வரப்பட்டது அல்ல! இலையில் உணவு உண்ணும்
பழக்கம் ஆதிமனிதனிலிருந்து இருக்கின்றது. இதை பற்றி அறிவியல் பூர்வமாக
பார்ப்போம். நாம் தமிழர்கள். நம் முன்னோர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்காமால்
கூற மாட்டார்கள். பழக்க வழக்கத்திற்கு கொண்டுவரமாட்டார்கள்.
நாம்
ஒவ்வொன்றாக பார்ப்போம்.
பொதுவா வாழை இலையில் சாப்பிடுவது என்பது உடலுக்கு உகந்தது.
வாழை இலை அடியில் முத்தி இருக்கும்.
அதாவது தலை வாழை இலை என்று எடுத்துக்கொண்டால் அதன் நுனி பக்கம் இடது கை
பக்கமாகத்தான் போடுவார்கள்.அடிபாகம் வலது கை பக்கம் இருக்குமாறு
போடுவார்கள்.
ஏன்
அவ்வாறு போடுகிறார்கள்?
நுனி இடது பக்கம் இருக்குமானால் நாம் சாப்பிடும் பக்கம்
முத்தி இருக்கும்.எதிர்பக்கம்
இளம் இலையாக இருக்கும். இந்த மாதிரி வைத்துசாப்பிடும்போது நமது கை நகம் பட்டு இலை அவ்வளவு
சீக்கிரம் கிழியாது.இதுவே எதிர்புறம்
என்றால் இளம் இலை வெகு சீக்கிரம் கிழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் எதிர் புறம் சுருட்டிக்கொண்டு இருக்கும் .
மேலும் இலையில் ஓடும் நரம்புகள் நமது வலது கை
பழக்கத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும்.நாம் பொதுவாக நமது வலது கையால்
சாப்பிடும்போது உணவை வலது பக்கமாக சுழற்றி எடுத்துதான் சாப்பிடுவோம். அவ்வாறு
சாப்பிடும்போது இலையின் நரம்புகள் நமது விரல்கள் சுழலும் திசைக்கு வாட்டமாக
இருக்கும்.இலை கிழியாது.
மேலும், நாம் உண்ணும் பகுதி முத்தி இருப்பதால்
இயல்பாகவே அதற்கு எடை அதிகம்.எதிர் பக்கம்
இளம் இலை என்பதால் அதற்கு எடை குறைவு.
இப்ப
இலையை எந்த பக்கம் மடிப்பது என்ற பிரச்னைக்கு வருவோம்.
நாம் சாப்பிட்டது போக மிச்சம் இருக்கும் உணவு
பகுதிகளை இலைக்கு நடுவில் சேகரித்து எதிர்புறம் உள்ள இலையை நம்பக்கம்
மடித்தால் குறைவான எடை காரணமாக இலை தூக்காது.இலையில் உள்ள நீர்ம பொருட்கள்
நம் மீது தூக்கி அடிக்காது .
இதையே அப்படியே மாற்றி செய்தால் என்ன ஆகும்?சற்றே சிந்தியுங்கள். எதிர்புறம் மீதமான உணவுகளை
வைத்துவிட்டு நம்பக்கம் இருக்கும் முத்தின இலையை எதிர்புறம் மடித்தால் அது
எடை காரணமாக,
டெம்பர்
காரணமாக நம் மீதே திருப்பி அடிக்கும். இதுதான் அறிவியல்.
மேலும் இலை எடுக்கும்போது நம் விரல்களை இலைக்கு அடியில் உள்ளே
விட்டு மேல் பக்கம் கட்டை விரலால்
அழுத்தி எடுப்போம். அவ்வாறு எடுக்கும்போது முற்றிய இலை அடியில் இருந்தால் இலை
கிழியாமல் வரும்.இலையின் உள்ளே மீதமான உணவுகள் சிந்தாது.
பெண் பார்க்கும் வீடாக இருந்தாலும் சரி , கல்யாண வீடாக
இருந்தாலும்சரி
,அவர்கள்
எவ்வளவு தான் வறுமையில் வாடினாலும் இலையில் தான் உணவு பரி மாறுவார்கள் . அதுதான்
தமிழரின் கலாச்சாராம் . விருந்தோம்பல்.எங்கேயாவது ஒரு திருமண வீடு
காட்டுங்கள் பார்ப்போம் தட்டில் உணவு பரிமாரினதை. இன்னறைய நாகரீக உலகில் பாக்கு இலை
தட்டு வந்துள்ளது .அதுவும் இலைதான் . அப்படியும் எந்த இலையும் கிடைக்க
வில்லை எனில் தையல் இலை போடும் பாரம்பரியம் தமிழர் பாரம்பரியம் .
தமிழர்கள் பெண் பார்க்கும் படலத்தின் போது நேரிடையாக
குறிப்பால் உணர்த்தினார்கள், ஒரு பெண்ணிடம் நேரடியாக
சொல்லமுடியாத காரணத்தினால் இது ஒரு வழியாக இருந்தது,
அடுத்து துக்க
வீட்டில் போடப்படும் உணவு பற்றியது . சாவு எல்லாருக்கும்
வருவதுதானே என்று . அப்ப துக்க
வீட்டில் மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிடவேண்டியதுதானே? தமிழர்கள் மரண வீட்டில் செய்யும் உணவு
செலவுகள் உறவினர்கள்,
நண்பர்களால் பகிர்ந்து செலவு
செய்வார்கள் இதுதான் தமிழர்களின் வழக்கம். எங்கள் தமிழ் (கவனிக்க: எங்கள்)
கலாச்சாரம் உணர்வுபூர்வமாக அன்புடன் கலந்தது . எங்கள் உறவினர்கள் இறந்தால்
அதற்காக வருத்தப்படுவோம் .
16ம் நாள் கழித்து சகஜ நிலைக்கு திரும்பும்
வண்ணம் ஒரு சிறிய அளவிலான உணவு அனைவருக்கும் பரிமாறுவார்கள் . மீண்டும்
இப்படி ஒரு துக்கம் இந்த வீட்டில் நிகழக்கூடாது என்பது எங்கள் விருப்பம்
என்று இலையை எதிர் பக்கம் மடிப்பார்கள் .
No comments:
Post a Comment